Our Feeds


Tuesday, November 17, 2026

Zameera

லாப்ஸ் எரிவாயு விலையில் அதிரடி குறைப்பு!

 

லாப்ஸ் எரிவாயு நிறுவனம், 12.5 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையை 745 ரூபாவால் குறைத்துள்ளது. 




இதன்படி, இதுவரை 6,740 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட சிலிண்டரின் புதிய விலை 5,995 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 




இந்த விலைக்குறைப்பு இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. 




வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் கோரிக்கையையும், நுகர்வோர் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளையும் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 




இதேவேளை, 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,398 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 




மாவட்ட ரீதியான விலைகள் மற்றும் எரிவாயு கிடைக்கும் விபரங்களை அறிந்துகொள்ள 1345 என்ற நிறுவனத்தின் அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »