Our Feeds


Thursday, November 12, 2026

Zameera

தொழிற்பயிற்சிக்கு வயதும் உடற்தகுதியும் தடையாக இருக்கக்கூடாது

 




தொழிற்பயிற்சியைப் பெற்று நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்ய ஒருவரது வயது அல்லது  உடற்தகுதி தடையாக இருக்கக் கூடாது என்று மத்திய மாகாண ஆளுநர், விசேட வைத்திய நிபுணர் சுரங்க பெர்னாண்டோ தெரிவித்தார்.


தேசிய தொழிற்தகைமைப் பாடநெறிகளைப் பயின்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (10)  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


மத்திய மாகாணத் கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வியாபார மேம்பாட்டுத் திணைக்களம் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அமைந்துள்ள 18 தொழிற்பயிற்சி நிறுவனங்களில் தேசிய தொழிற்தகைமைப் பாடநெறிகளைப் பயின்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் வகையில் இது கண்டியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்களுக்கும்,  எதிர்காலத்தில்  தொழிற்பயிற்சிகளை வழங்க  மத்திய மாகாணத்தில் வாய்ப்புக்கள் உள்ளதாகவும், ஒருவர்  எந்த நிலையில் யில் இருந்தாலும்  அவர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டவருவதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.



மாற்றுத்திறனாளித் தன்மை அல்லது வயது எல்லையைக் கருதாமல் மத்திய மாகாணத்தில் தொழிற்பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டமொன்று திட்டமிடப்பட்டு வருவதாகவும்,  தான் எந்தத் தகுதியில் இருந்தாலும் தொழிற்பயிற்சியைப் பெற்று நாட்டின் பொருளாதாரத்திற்குப் அவர்களால் பங்களிப்பு செய்ய முடியும் என்பதால், அதற்கு  ஒருவரது உடற்தகுதி தடையாக இருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.


மரத் தொழில்நுட்பம், உலோகக் கைத்தொழில், மோட்டார் கைத்தொழில் தொழில்நுட்பம், கணினிப் பயிற்சி, தையல் மற்றும் இலகு மெக்கானிக்கல் பொறியியல் தொழில்நுட்ப உயர் பாடநெறி உள்ளிட்ட ஓராண்டுப் பாடநெறிகளைப் பயின்ற மாணவர்கள் இங்கு சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.


அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஆளுநர், அரசாங்கத்தினால் எவ்விதக் கட்டணமும் இன்றி வழங்கப்பட்ட இப் பயிற்சியின் பின்னர், விரும்பினால் மேலும் உயர் பயிற்சி வாய்ப்புகளில் பங்கேற்க முடியும் என்றார். தேசிய தொழிற்தகைமை (NVQ-4) சான்றிதழ் பெற்றவர்களுக்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு இப் பயிற்சி போதுமானது என்றும், தேவைப்பட்டால் மேலும் உயர் பயிற்சி வாய்ப்புகளைப் பெறுவதற்கான வசதிகள் மத்திய மாகாணத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த, மத்திய மாகாணக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சரிதா இலங்ககோன், கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வியாபார மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உதார கொன்சிவத்த உள்ளிட்ட அதிகாரிகளும், பயிற்சியை முடித்த மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »