Our Feeds


Sunday, November 15, 2026

Zameera

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்துக்கு நுகர்வோர் அதிகார சபை அழைப்பு

 

(இராஜதுரை ஹஷான்)


லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த வெள்ளிக்கிழமை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க அந்நிறுவனத்தின் அதிகாரிகள் இன்றைய தினம் நுகர்வோர் அதிகாரசபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சந்தையில் லாப் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,775 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரங்கள், கப்பற் கட்டணம் மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் என்பவற்றுடன் இந்நாட்டிற்கு எரிவாயு தொகையைக் கொள்வனவு செய்வதற்கான செலவு அதிகரித்தமையே இந்த விலை திருத்தத்திற்குக் காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்தையில் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் 1,700 ரூபா அளவில் ஒரே கட்டமாக அதிகரித்தமைக்கு பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »