Our Feeds


Tuesday, November 17, 2026

SHAHNI RAMEES

நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரிய பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது!

 



நீதிமன்ற விசாரணையைத் தவிர்த்த குற்றச்சாட்டின்

பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


நீதிமன்றத்தில் இன்று முன்னிலைபடுத்தப்பட்ட அவர், தமது மன்னிப்பைத் தெரிவித்ததை அடுத்து, செல்ல அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நீதிமன்றில் முன்னிலை 

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றை அனுமதியின்றி நிறுவியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் முன்னதாக முன்னிலையாகத் தவறிய கஸ்ஸப தேரர், நேற்று (16) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார். 


அதைத் தொடர்ந்து, இன்று (17) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


கடந்த நவம்பர் 11 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதையடுத்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »