Our Feeds


Thursday, November 19, 2026

ShortNews

இலங்கை மின்சார சபையில் ஏற்பட்ட நட்டம்!


இலங்கை மின்சார சபை 2025 ஆம் ஆண்டின் 38,739 மில்லியன் ரூபா நிகர நட்டமடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று (19.11.2026) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கர கேட்ட வினாவுக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.மின்சார சபை தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர்

2025 டிசம்பர் 31 உடன் முடிவடையும் நிதியாண்டிற்கான மொத்த வருமானம் 4,22,506 மில்லியன் ரூபாவாகும்.

2024 இல் மொத்த இலாபம் 141,604 மில்லியன் ரூபாயாகும்; 2023 இல் 57,632 மில்லியன் ரூபாயாகும்.

பொதுவாகக் கட்டணக் குறைப்பு காரணமாக வருமானத்தில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏனைய வருமானங்களில் குறைவு. அதேபோல 2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நட்டத்திற்குப் பிரதான காரணங்களாக:

மின்சார விற்பனை அளவு அதிகரிப்பு மற்றும் நிதிச் செலவு குறைவு ஆகியவற்றுக்கு மத்தியில் குறைக்கப்பட்ட கட்டண முறை மின்சார கொள்முதல் செலவு அதிகரிப்பு மற்றும் கூரைகளில் பொருத்தப்பட்ட சூரிய சக்தி அமைப்புகளுக்கு செலுத்தப்படும் தொகை அதிகரிக்கப்பட்டமை போன்ற சூழ்நிலைகளால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

2025 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் திறைசேரியினால் எவ்விதத் தொகையும் வழங்கப்படவில்லை. 

ஆனால் 2023 ஆம் ஆண்டில் 277 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. இது உண்மையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளுக்காக மேலதிக பங்கு முதலீடாக வழங்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »