Our Feeds


Tuesday, November 17, 2026

Zameera

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து!

 

இரத்தினபுரி, கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பழைய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டடமொன்றில் இன்று (17) செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இந்தத் தீ விபத்து அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், இரத்தினபுரி மாநகர தீயணைப்புப் பிரிவினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


மேலும், சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


தீ விபத்து ஏற்பட்ட கட்டடமானது இதற்கு முன்னர் உள்நோயாளர் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், பின்னர் புதிய கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் குறித்த விடுதி புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மின்சாரக் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இலங்கை மின்சார சபை அதிகாலை 4.00 மணியளவில் அப்பகுதிக்கான மின்சார விநியோகத்தைத் துண்டித்துள்ளது.


மேலும், தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »