கொபெய்கனே பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜண்ட், எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, குறித்த பொலிஸ் சாஜண்ட்டை இன்று (2) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, இன்றைய தினம் சந்தேக நபரான சார்ஜண்ட் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நிக்கவெரட்டிய நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
