Our Feeds


Showing posts with label #New. Show all posts
Showing posts with label #New. Show all posts

Tuesday, October 22, 2024

Zameera

சீன அரசாங்கம்: 30 மில்லியன் ரூபா நிவாரணம்


 அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங்( Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது.

மேலும், எதிர்கால வெள்ள நிலைமைகளைத் தடுப்பதற்கும், அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கும் பின்பற்றக்கூடிய நிலையான தீர்வுகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அண்மையில் பெய்த கடும்மழையால், பல மாவட்டங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்ததோடு உட்கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தன

Tuesday, August 27, 2024

Zameera

இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை


 தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் தலைகீழாக மாறினால், கடந்த இரண்டு வருடங்களில் நாம் அனுபவித்ததைப் போன்ற பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மீண்டும் ஏற்படக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிற்சங்கங்களின் 37வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தனது விருப்பத்தை வெளிப்படுத்திய மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,

“உங்கள் அனைவருக்கும் தெரியும், தற்போதைய சீர்திருத்த செயல்முறையானது பொருளாதாரத்தை அதன் அசைக்க முடியாத ஸ்திரத்தன்மைக்கு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கியது, இது நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்கு அவசியம்.

இந்த சீர்திருத்தங்கள் குறுகிய காலத்தில் வேதனையளிக்கும் என்றாலும், நீண்ட கால தாமதமான இந்த சீர்திருத்தங்களை செயல்படுத்த அனைத்து தரப்பினரின் அர்ப்பணிப்பும் பொருளாதாரத்தை நிலையான மற்றும் விரிவான வளர்ச்சியின் பாதையை நோக்கி வழிநடத்த முக்கியமானது.

அத்தகைய முயற்சி எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், எந்தவொரு அரசியல் அல்லது சமூக நிச்சயமற்ற தன்மை அல்லது கடின முயற்சிகளின் மூலம் பெறப்பட்ட முடிவுகளின் தலைகீழ் மாற்றமானது, மறுசீரமைப்பு செயல்முறைக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் பொருளாதாரத்தின் எதிர்பார்க்கப்படும் போக்கை மாற்றும் மற்றும் பொருளாதாரத்தில் மாற்ற முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும். மீண்டும் ஒரு சமூக நெருக்கடி ஏற்படலாம்.

தற்போதைய இறையாண்மைக் கடன் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், கடந்த காலங்களைப் போன்று அதிக செலவினங்கள் மற்றும் வரிக் குறைப்புக்கள் மூலம் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் நிதி இடமில்லை.

நிதி மற்றும் கடன் நிலைத்தன்மையை மீண்டும் நிறுவுவது இப்போது மற்றும் எதிர்காலத்திற்கான முதன்மைத் தேவையாகும்.”

Saturday, August 24, 2024

Zameera

சீனாவில் மோசமான வானிலை: 11 பேர் உயிரிழப்பு


 சீனாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 14 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் பெய்த கனமழையால் இந்த அனர்த்த நிலைமை பதிவாகியுள்ளது.

வெள்ள அபாயம் காரணமாக, மாநிலத்தில் உள்ள 50,000க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

Sunday, August 11, 2024

Zameera

அரசியலுக்கு மக்கள் கருத்து அவசியம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க


 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் இலங்கை இன்று பங்களாதேஷை விட மோசமான நிலைக்குச் சென்றிருக்கும் என நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.



மக்களின் கருத்துக்கு செவிசாய்க்காமல் அரசியல் செய்ய முடியாதெனக் கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தான் இன்னும் அசல் எனத் தெரிவித்துள்ளார்.       பொலனறுவையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலனறுவ மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Monday, July 22, 2024

Zameera

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயார் - அஞ்சல் திணைக்களம்


 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி தேர்தலுக்கான திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதன் பின்னர், தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித கே. ரணசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இந்த வருடம் நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறையைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்தல் நடைபெறும்.

 

அந்த வகையில், தேர்தலை நடத்துவதற்கான உரிய திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததன் பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகளை அஞ்சல் திணைக்களம் ஆரம்பிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, June 6, 2024

Zameera

இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை வழங்க வேண்டும் - சஜித் பிரேமதாச


 ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு இலங்கை பாராளுமன்றத்தின் 225 பேரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இந்தியத் தேர்தலில் வெற்றிப்பெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றும் போதே எதிரக்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.

அதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,
அடுத்தடுத்து மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கும், மீண்டும் ஆட்சியமைக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றோம். இலங்கை இந்தியா இடையே நெருக்கமான நட்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இதனால் உலகில் அதிகளவான சனத்தொகையை கொண்ட இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமை வழங்கப்படுவது முக்கியமாகும். குறிப்பாக உலகளாவிய அதிகார கேந்திரநிலையமாக உள்ள இந்தியாவுக்கு ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை வழங்குவது உண்மையிலேயே செயற்படுத்தப்பட வேண்டியதே இந்த பாராளுமன்றத்தின் 225 பேரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இதனால் இந்த யோசனையை நான் முன்வைக்கின்றேன்.

பிரதமர் மோடி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அதிகளவான பிரதிநிதித்துவத்தை வென்று அடுத்தடுத்து ஆட்சியை பெற்றுக்கொண்டுள்ளார். இது இலகுவானது அல்ல. வரலாற்று நிகழ்வாகும். இதனால் பிரதமர் மோடியிடம் இருந்து நாங்கள் அனுபவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த போது மக்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு அனைவருக்கும் செளபாக்கியம் என்ற அடிப்படையில் பொருளாதாரத்தை உயர்தியுள்ளார் இதன்படி அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார். 


Thursday, May 16, 2024

Zameera

விஞ்ஞானப் பாடத்தில் சில வினாக்களுக்கு இலவசப் புள்ளி வழங்க தீர்மானம்

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளின் சில வினாக்களில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக, குறித்த வினாக்களுக்கு மாத்திரம் இலவசப் புள்ளிகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானப் பாடத்திற்கான வினாத்தாளில் காணப்படும் சில வினாக்கள் பாடத்திட்டத்திற்கு அப்பால் காணப்படும் விடயங்களில் இருந்து தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 2 MCQ வினாக்களுக்கு 2 இலவசப் புள்ளிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, உயர்தர வகுப்புக்களை எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.

இதற்கான சுற்று நிரூபம், மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பான தகவல்கள் கிடைக்காத பட்சத்தில், மாகாண அல்லது வலய கல்வி அதிகாரிகளை தொடர்புக்கொண்டு அதிபர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு கூறியுள்ளது.

உயர் தர வகுப்பு தொடர்பான தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமாயின், பாடசாலை அதிகாரிகளை தொடர்புக்கொள்ளுமாறு கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது

 

Zameera

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை


 இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், தென் மற்றும் கிழக்கு கடலோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Sunday, May 12, 2024

Zameera

ஆர்ஜென்ரீனா ரயில் விபத்தில் 90 பேர் காயம்


 ஆர்ஜென்ரீனா ரயில் விபத்தில் 90 பயணிகள் காயமடைந்துள்ளனர். 


ஆர்ஜென்ரீனா தலைநகர் ப்யூனொஸ் அயர்சிலிருந்து 7 பெட்டிகளை கொண்ட பயணிகள் ரயிலொன்று நேற்றுமுன்தினம் (10) வடக்கு புறநகர்ப் பகுதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டி மீது வேகமாக மோதி தடம் புரண்டுள்ளது. 


இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்த பயணிகளை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

Friday, May 10, 2024

Zameera

இன்று முதல் ஆங்கில பாட ஆசிரியர் தேர்வு


 தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆங்கில பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு இன்று (10) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேர்முகத் தேர்வுகள் 10,11, 13 மற்றும் 20ஆம் திகதிகளில் பத்தரமுல்லையில் உள்ள பொருளாதார கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளன.

இந்த ஆட்சேர்ப்புகள் டிசம்பர் 12, 2021 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையின் முடிவுகளின்படி செய்யப்படுகின்றன மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.moe.govlk இல் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆங்கில பாட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-1 (c) இல் டிப்ளோமா பெற்றவர்களை இணைத்துக் கொள்வதற்காக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Thursday, May 9, 2024

Zameera

நாட்டிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ இலவச அரிசி


 நாட்டிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ இலவச அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பலத்த பாராட்டுக்கள் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மாணவர் பிக்குகள் மற்றும் துறவிகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை இந்த மே மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

Friday, April 26, 2024

News Editor

காஸா சிறுவர் நிதி நன்கொடைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு


 காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்திற்கான (Children of Gaza Fund) நிதி நன்கொடைகள் இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.

கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் 1,589,000 ரூபாவையும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிண்ணியா கிளை 5,300,000 ரூபாவையும், கல்முனை வலயக் கல்வி அலுவலகம் 3,128,500 ரூபாவையும், Sports First Foundation 300,000 ரூபாவையும் சிறுவர் நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.

எதிர்வரும் காலங்களில் குறித்த பணம் உத்தியோகபூர்வமாக பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

நன்கொடையாளர்கள் 2024 ஏப்ரல் 30, வரை மாத்திரமே இந்த நிதியத்திற்கு தொடர்ந்து பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் நன்கொடைகளை வழங்க விரும்புவர்கள் இருப்பின், அந்த நன்கொடைகளை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை வங்கியின் (7010) தப்ரோபன் கிளையில் (747) உள்ள கணக்கு இலக்கமான 7040016 க்கு வைப்பீடு செய்ய வேண்டும் என்றும் அது தொடர்பான பற்றுச் சீட்டை 077-9730396 என்ற எண்ணுக்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Thursday, April 25, 2024

News Editor

தங்கத்தின் விலை குறைவடைந்தது!


 இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (25) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட்  ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 173,000 ஆக குறைந்துள்ளது.

நேற்று (24) இதன் விலை 174,800 ரூபாவாக காணப்பட்டது

இதற்கிடையில் 190,000 ரூபாயாக நிலவிய "24 கரட்" தங்கம்,  ஒரு பவுனின் விலை இன்று 188,000 ரூபாயாக சற்று குறைந்துள்ளதாக கொழும்பு  செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

News Editor

பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை எடுத்துச் சென்றவர் கைது


 மாத்தளை வில்கமுவ பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கியை எடுத்துச் சென்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் வில்கமுவ பொலிஸாரால் அரலகங்வில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாய 10, நுககொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இதன் போது குறித்த சந்தேக நபர் புத்தர் சிலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கியை விட்டுச் சென்ற நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Wednesday, April 24, 2024

News Editor

உமாஓயா அனல்மின் நிலைய மின்உற்பத்தி இயந்திரங்களுக்கு பணியாளர்களின் பெயர்கள்




 உமாஓயா நிலத்தடி அனல்மின் நிலையத்தின் இரண்டு மின்உற்பத்தி இயந்திரங்களை நிர்மாணித்த போது பணிபுரிந்த இரண்டு பணிப்பெண்களின் பணியைப் பாராட்டி  'தசுனி' மற்றும் 'சுலோச்சனா' என அவர்களின் சூட்டப்பட்டுள்ளன.

 

300 மீற்றர் ஆழத்தில் இருந்து பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான பானங்கள் தயாரிப்பது உள்ளிட்ட ஏனைய பணிகளின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காக தலா 60 மெகாவொட் திறன் கொண்ட இரண்டு ஜெனரேட்டர்களுக்கு அந்தத் தொழிலாளர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக உமாஓயா மின் உற்பத்தி நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tuesday, April 23, 2024

News Editor

சீனாவில் பலத்த மழை


 சீனாவில் அதிக சனத்தொகையை கொண்ட குங்டோங் மாகாணத்தில் பெய்து வரும் பலத்த மழையினால் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அப்பகுதியிலிருந்து சுமார் 60 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வௌ்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் காணாமல் போயுள்ளனர். 

Monday, April 22, 2024

News Editor

பத்து கிலோ இலவச அரிசிக்கு 100 ரூபா அறவிட்ட கிராம சேவகர்


 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தேசிய அரிசி விநியோகத் திட்டத்தின் கீழ் பத்து கிலோ அரிசியை வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து நூறு ரூபா அறவிடப்படுவதாக திம்புலாகல மானம்பிட்டிய பிரதேசத்திலிருந்து செய்தியொன்று பதிவாகியுள்ளது.


மானம்பிட்டி கிராம சேவகர் அலுவலகத்தில் இன்று (22) குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான விநியோகம் இடம்பெற்றதுடன், பத்து கிலோ அரிசி வழங்க வேண்டுமாயின் நூறு ரூபாயை கொண்டு வருமாறு கிராம சங்க உறுப்பினர்கள் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அறிவித்துள்ளனர்.


அரிசி பெறவரும் போது அந்தத் தொகையைக் கொடுக்கத் தவறியவர்களுக்கு அரிசி கிடைக்காதென கூறிப்பிட்டுள்ளனர்.


சமுர்த்தி கிராம சங்கத்தின் தலைவர் ஜி.பி. துஷாரியிடம் தொலைபேசியில் நடத்திய விசாரணையில், வரவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களை மகிழ்விக்க இவ்வளவு தொகை வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.


பின்னர், திம்புலாகலை பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீனிடம் தொலைபேசி மூலம் நடத்திய விசாரணையில், இவ்வாறு அரிசி வழங்கும் போது பணம் வசூலிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் வசூலிக்க அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை எனவும், அது குறித்து எழுத்து மூலம் தெரிவித்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயாரெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


News Editor

ஜூலை முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயம்


 எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என்று மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளின் மேல் இடது மூலையில் பயணிகள் பார்க்கக் கூடிய வகையில் கட்டணத்தை காட்டும் மீட்டர் பொருத்துவது கட்டாயம் என்றும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகள் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் கட்டணங்களை வசூலித்தால் அது தொடர்பான முறைப்பாடுகளை 0112860860 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசி (Mobile phone) மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி (Three Wheelers) சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News Editor

புகையிரத பராமரிப்பு பணிகளுக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை


 புகையிரத பராமரிப்பு பணிகளுக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புகையிரத சேவை தொடர்ச்சியாக நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

“சமீபத்தில், பேருந்துகள் இல்லாத வீதிகளில் பிள்ளைகள் பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைக்கும் செல்ல இந்திய கடன் திட்டத்தின் கீழ் 500 பேருந்துகளை இந்தியாவிலிருந்து கடன் வாங்கினேன். கடன் வாங்காவிட்டால், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை வாங்க முடியாது.

60-70 ஆண்டுகள் பழமையான ரயில்கள் உள்ளன, ஆனால் வேறு புதிதாக வாங்க பணம் இல்லை. பணம் இல்லை என்பது ரயில் சேவையில் நஷ்டம். நஷ்டத்தில் இருக்கும் போது, ​​தண்டவாளங்கள் அமைக்க கூட எங்களிடம் பணம் இருக்காது. ரயில்கள் தடம்புரள்வதாக மக்கள் கூறுகின்றனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து 10,000 தடங்கள் கடன் வாங்கப்பட்டு, இப்போது தடம்புரள்வு இடம்பெறும் இடங்களுக்கு மாற்றப்படுகின்றது. அவிசாவளையில் இருந்து கொழும்புக்கு செல்லும் களனி ரயில் பாதையை எப்படியாவது மின்சார ரயில் பாதையாக மாற்ற எமக்கு தெரிந்த அனைத்து முயற்சிகளையும் நானும் பிரதமரும் செய்து வருகிறோம். “ என்றார்.

News Editor

மாலைத்தீவு தேர்தலில் ஜனாதிபதி மொஹம்மட் முய்ஸுவின் கட்சி அமோக வெற்றி


 மாலைதீவு 20 ஆவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்ய நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) தேர்தல் நடைபெற்றது. 

அங்குள்ள 93 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 

இந்த தேர்தலில் சீன சார்புடைய ஜனாதிபதி மொஹம்மட் முய்ஸுவின் பி.என்.சி. கட்சி அதிகப்படியான இடங்களில் வென்று பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. சுமார் 66 இடங்களை முய்சஸுவின் கட்சி வென்றுள்ளது. இது பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பங்காகும்.