Our Feeds


Showing posts with label #news. Show all posts
Showing posts with label #news. Show all posts

Tuesday, October 22, 2024

Zameera

பொதுநலவாய அமைப்பின் மாநாடு


 பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சமோவா அபியா (Samoa Apiya) இல் இடம்பெறவுள்ளது.

Thursday, October 3, 2024

Admin

வினாத்தாள் கசிவு விவகாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்!


குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் நிறைவடையும் வரையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் என்பவற்றுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று முன்தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் என சில பெற்றோர்கள் கோருகின்ற நிலையில், மீண்டும் பரீட்சை நடத்தப்படக் கூடாது எனப் பரீட்சைக்குத் தோற்றிய பெரும்பாலான சிறுவர்களும் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இந்த விடயம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காகப் புலமைப் பரிசில் பரீட்சையில் பாதிப்பை எதிர்நோக்கிய தரப்பினர் சிலர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாக்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்ததாகப் பெற்றோரும் ஆசிரியர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து பரீட்சை திருத்தப் பணிகளை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Friday, August 23, 2024

Zameera

2025 - ல் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு


 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்குமான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளை தீர்க்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன தெரிவித்தார். 

கல்வித் தகைமை, அனுபவம், பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, கடைநிலை ஊழியர்களுக்கு 24 வீதமும், உயர்நிலை அதிகாரிகளுக்கு 24 முதல் 50 வீதத்திற்கு மேல் வரையான சம்பள அதிகரிப்பு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Friday, August 16, 2024

Zameera

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி விவரங்களை வேட்பாளர்கள் வெளியிடவேண்டும்



தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி எப்படி கிடைக்கின்றது என்பது உள்ளிட்ட விபரங்களை  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் வெளியிடவேண்டும் என  தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

செப்டம்பர் 21 ம் திகதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவுசெய்யக்கூடிய பணத்தின் வரம்பினை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் பிரச்சாரத்திற்காக எவ்வளவு செலவிடலாம் என்பதை தீர்மானி;ப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வேட்பாளர்களை தீர்மானிக்கவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிப்பதை வேட்பாளர்கள் பின்பற்றவேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி வெற்றிபெற்றவர் அறிவிக்கப்பட்டதும்,தாங்கள் செலவிட்ட பணம் குறித்த விபரங்களை வெளியிடுவதற்கு அனைத்து வேட்பாளர்களிற்கும் 21 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் அறிக்கையை ஆராய்ந்து பத்து நாட்களின் பின்னர் இணையத்தில் அது குறித்த விபரங்கள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்ததற்கு அதிகமாக வேட்பாளர் எவராவது செலவுசெய்திருந்தால் அவருக்கு எதிராக பொதுமக்கள் நீதிமன்றம் செல்லலாம் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Monday, July 29, 2024

Zameera

2024 இல் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு


  கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில், வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற இரண்டு வருட முன்னேற்றம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2024ல், வனவளத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 2022ஆம் ஆண்டு வன வளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 289,405 ஆகவும், 2023ஆம் ஆண்டில் 444,053 ஆகவும் பதிவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் சுமார் 364 521 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் என்றார். 

Wednesday, June 12, 2024

Zameera

IMF இன் 3 ஆவது கடன் தவணைக்கான கலந்துரையாடல் இன்று


 சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கான கலந்துரையாடல் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு குறித்து கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது எக்ஸ்  தளத்தில் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது தவணைக்கான வெற்றிகரமான மீளாய்விற்கு அனைத்து நாடுகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.