Our Feeds


Monday, July 29, 2024

Zameera

2024 இல் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு


  கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில், வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற இரண்டு வருட முன்னேற்றம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2024ல், வனவளத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 2022ஆம் ஆண்டு வன வளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 289,405 ஆகவும், 2023ஆம் ஆண்டில் 444,053 ஆகவும் பதிவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் சுமார் 364 521 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »