அபுதாபிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் எயார்வேஸ் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் எயார்வேஸ் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பஹ்ரைன், அம்மான், தோஹா, டுபாய் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் இந்த மாத இறுதி வரை ரத்து செய்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
