Our Feeds


Wednesday, March 11, 2026

Zameera

திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுகிறது - நாமல் ராஜபக்ச


 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் நிலையில், உள்நாட்டில் விலையை உயர்த்தியிருப்பது தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது.

நிலக்கரி கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகளினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே அரசாங்கம் மக்கள் மீது இந்தச் சுமையை சுமத்தியுள்ளது.

அரசாங்கம் முறையான கேள்வி கோரல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் காலத்தை இழுத்தடித்தமையே இன்று நாடு எதிர்கொள்ளும் இந்த நெருக்கடிகளுக்குக் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »