முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டமைக்கு தனது அலுவலக அதிகாரிகளின் தவறே காரணம் எனத் தெரிவித்துள்ளார். அரசுச் செய்திகள்தான் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதற்கான நடைமுறையில் நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் அனுமதி பெறப்படாமல் தனது கையொப்பம் மாத்திரம் பெறப்பட்டதாகவும், இது தொடர்பில் தன்னைத் தவறாக வழிநடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனது அதிகாரிகளின் தவறால் மகா சங்கத்தினருக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக மன்னிப்புக் கோருவதாகவும் இன்று (19) வெளியிட்ட வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
