Our Feeds


Monday, October 19, 2026

SHAHNI RAMEES

கொழும்புத் துறைமுகத்தின் 392 மில்லியன் டொலர் திட்டத்தைக் கைவிட சீனா தீர்மானம்!

 


கொழும்புத் துறைமுகத்தில் நடைமுறைப்படுத்தத்

திட்டமிடப்பட்டிருந்த தெற்காசிய வணிக மற்றும் விநியோக மைய (SACLH) திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதற்கு அதன் பங்குதாரர்கள் தீர்மானித்துள்ளதாக 'China Merchants Port Holdings நிறுவனம் அறிவித்துள்ளது.


சுமார் 392 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிலான இந்த மிகப்பெரிய திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.


இந்தத் திட்டத்தைக் கைவிடுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட திகதியிலிருந்து 30 நாட்களுக்குள், இலங்கை துறைமுக அதிகாரசபை, முதலீட்டாளர்களுக்கு 21.9 மில்லியன் அமெரிக்க டொலரை ஒரே தடவையில் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என 'சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ்' விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திட்டத்தில் ஏற்பட்ட புறக் காரணிகள் மற்றும் காலக்கெடுவில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை நிறுத்துவது அனைத்துத் தரப்பினருக்கும் நன்மையளிக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அறிக்கையின்படி, இந்த் திட்டம் கைவிடப்பட்ட பின்னர் இலங்கை துறைமுக அதிகாரசபை, இத்திட்டத்தை முன்னெடுத்த நிறுவனத்திற்கு 21.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒரே தடவையில் செலுத்த வேண்டும். ஒப்பந்தம் கையெழுத்தான 30 நாட்களுக்குள் இத்தொகை செலுத்தப்பட வேண்டும்.


சீன நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனம் மேற்கொண்டிருந்த 26 மில்லியன் அமெரிக்க டொலர் ஆரம்ப முதலீட்டில், உரிய வரிகள் மற்றும் தாமதக் கட்டணங்கள் கழிக்கப்பட்ட பின்னரே இந்த 21.9 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தில் 70 சதவீத பங்குகளை குறித்த சீன நிறுவனமும், எஞ்சிய தலா 15 சதவீத பங்குகளை இலங்கையின் எக்சஸ் இன்ஜினியரிங் (Access Engineering) நிறுவனமும் இலங்கை துறைமுக அதிகாரசபையும் கொண்டிருந்தன.



இதற்கமைய, துறைமுக அதிகாரசபையினால் செலுத்தப்படும் நஷ்டஈட்டுத் தொகை இந்த மூன்று பங்குதாரர்களுக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »