Our Feeds


Showing posts with label `Braking news. Show all posts
Showing posts with label `Braking news. Show all posts

Saturday, November 26, 2022

ShortNews

அதிர்ச்சி தகவல் - கத்தார் FIFA WORLD CUP தொடர்பான விபத்துக்களில் 600 இலங்கையர்கள் மரணம் - கட்டுமானத்தில் 6500 பேர் உயிரிழப்பு



கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியுடன் தொடர்புடைய பல்வேறு விபத்துக்களில் சிக்கி சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


2010 ஆம் ஆண்டு முதல் உதைபந்தாட்ட மைதானங்கள், நெடுஞ்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் ஏனைய நிர்மாணப்பணிகளில் பங்குபற்றிய இலங்கையர்களே  இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, கத்தாரில் 6,500 கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்துக்களில் இறந்துள்ளதாக ஆசிய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

2014ஆம் ஆண்டிலேயே  இலங்கையர்களின் அதிக எண்ணிக்கையான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதாவது 54 பேர் உயிரிழந்துளள்னர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மொத்த இலங்கை நபர்களில்  439 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நட்டஈடு வழங்கியுள்ளது.

இந்த 439 பேரும்  வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ளதாக அதன் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர், பதிவு செய்யாமல் வெளிநாட்டில் இறந்தவர்கள் தொடர்பான தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும், எனவே 12 ஆண்டுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டலாம் என்றும் தெரிவித்தார்.

Wednesday, November 16, 2022

ShortNews

VIDEO: எந்த சிங்கள ஊருக்குள்ளும் அச்சமின்றி போகலாம் | முஸ்லிம் MP க்களுக்கு அக்குரணையை பாராட்ட முடியாதா?


எந்த சிங்கள ஊருக்குள்ளும் அச்சமின்றி போகலாம் | முஸ்லிம் MP க்களுக்கு அக்குரணையை பாராட்ட முடியாதா?




ShortNews

வைரஸ் காய்ச்சலுக்கு மாணவி பலி - சம்மாந்துறையில் சோகம்.



சம்மாந்துறை – அல்மர் ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் வைரஸ் காய்ச்சலுக்குள்ளாகி நேற்று உயிரிழந்துள்ளார்.


இவர் நேற்று இரவு கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது ஜனாசா இன்று (16) சம்மாந்துறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வைரஸ் காய்ச்சலின் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


(ட்ரூ சிலோன்)

ShortNews

மின்சார சபைக்கு ரூ.4,431 கோடி நட்டம் - காரணம் என்ன?



இலங்கை மின்சார சபைக்கு, கடந்த மூன்று மாதங்களில் 4,431 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சபை வெளியிட்டுள்ள நிதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இவ்வருடம் ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலாண்டில் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் 2021ஆம் ஆண்டு 2,145 கோடி ரூபாய் நட்டத்தை சந்தித்துள்ளதாகவும் மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது.

ShortNews

மாத்தளை சம்பவம் – சந்தேகநபரின் சொத்துக்கள் தீக்கிரை



மாத்தளை – உக்குவெல பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்து தாய் மற்றும் மூன்று பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.


குறித்த நபரின் வீட்டுக்குள் புகுந்த சில நபர்கள் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றுக்கு தீ வைத்துள்ளதாக மாத்தளை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தீயினால் சந்தேகநபரின் வீட்டின் சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

ShortNews

இன்று இரவு 09.00 மணிக்கு Short Talk நிகழ்ச்சியில் - அக்குரணை பிரதேச சபை தலைவர் இஸ்திஹார் இமாதுத்தீன்



ஓர் துடிப்பான அரசியல்வாதியின் துணிந்த செயல்பாடுகள். அகில இலங்கை மட்டத்தில் சிறந்த செயல்பாட்டுக்கான 3வது இடத்தை பெற்று தேசிய மட்டத்தில் கவனம் பெற்ற அக்குரணை பிரதேச சபையின் தலைவர் இஸ்திஹாருடனான Short Talk நிகழ்ச்சி 


இன்று இரவு 09.00 மணிக்கு ShortNewsTV யின் YouTube & Facebook பக்கத்தில்.