Our Feeds


Showing posts with label corona update. Show all posts
Showing posts with label corona update. Show all posts

Friday, November 4, 2022

ShortNews

மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளியின் குடும்பத்துக்கு 40 லட்சம் இழப்பீடு - இ.தொ.க வின் முயற்சிக்கு உடனடி பலன்.



(க.கிஷாந்தன்)


பதுளை - பசறை – கணவரல்ல தோட்டம் ஈ.ஜி.கே பிரிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன் கணேச மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 40 இலட்ச ரூபாய் நஷ்டஈட்டு தொகை இன்றைய தினம் வழங்கப்பட்டது.


இதற்கான காசோலையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஸ்வரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடிய பின் காசோலையை வழங்கி வைத்தனர்.


தோட்டக் கம்பனி ஒன்றுக்குச் சொந்தமான கனவரல்ல தோட்டத்தில் வசித்து வந்த தமிழரசன் கணேஷ்மூர்த்தி என்ற 25 வயதுடைய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் 09ஆம் திகதி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தார்.


அத்துடன், மின்சாரம் தாக்கியே அவரது மரணம் ஏற்பட்டுள்ளதாக, பதுளை சட்ட வைத்திய அதிகாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இவர் சாதாரண தொழிலாளி எனவும் மின்சார பராமரிப்புப் பணியை செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


பின்னர், குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியதோடு பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தாருக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தொழில் அமைச்சரிடம் முன் வைத்தனர்.


அதற்கு பதில் அளித்த தொழில் அமைச்சர் மனுஷன நாணயக்கார கூடிய விரைவில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.


அதற்கமைய நேற்று (03.11.2022) உயிரிழந்த தமிழரசன் கணேச மூர்த்தியின்  குடும்பத்தினருக்கு 40 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Tuesday, November 1, 2022

SHAHNI RAMEES

தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்திற்கு தீர்வு....!








சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் மோட்டார்

Saturday, October 29, 2022

ShortNews

தேசிய பாடசாலைக்கு முற்றுப்புள்ளி l கொத்தணி பாடசாலைகள் ஆரம்பம்



அனைத்து பாடசாலைகளுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் தேசிய பாடசாலை கருத்திட்டத்திற்கு தான் கொள்கை அளவில் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


கொழும்பு வலக கல்வி பணிமனையில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

தேசிய பாடசாலைகளுக்கு பதிலாக பல பாடசாலைகளை இணைத்து பாடசாலை கொத்தணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதமாகும் போது, நாடு முழுவதும் 1200 பாடசாலை கொத்தணிகளை ஆரம்பிப்பதற்கான இயலுமை கிடைக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பாடசாலை கொத்தணிக்குள் காணப்படுகின்ற பாடசாலைகளுக்கு இடையில் முகாமைத்துவ செயற்பாடுகளின் ஊடாக பௌதீக மற்றும் மனித வளங்களை பரிமாற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளின் மூலம், மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திறமை கிடைக்கும் என்பதுடன், செலவீனங்களை குறைப்பதற்கான பொறிமுறையாக இது அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த செயற்பாட்டின் ஊடாக, பாடசாலைகள் அல்லது வளங்கள் இடமாற்றப்படவோ அல்லது ஒதுக்கீடு செய்யவோ முடியாது என கூறிய அவர், பௌதீக மற்றும் தொழில்நுட்ப முறைகள் மூலம் பரிமாற்றங்கள் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

Friday, October 28, 2022

ShortNews

வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடி – 08 ஆம் திகதி சபையில் விவாதம்! மனோ, அநுர கூட்டு பிரேரணை முன்வைப்பு

 

நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார

Sunday, October 23, 2022

ShortNews

இம்மாதம் முடிவில் காலாவதியாகும் 10 லட்சம் கொவிட் தடுப்பூசிகள்: சுகாதார அமைச்சு தகவல்



பல லட்சம் கொவிட் 19 தடுப்பூசிகள் இம்மாத முடிவில் காலாவதியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


காலாவதியாகவுள்ள கொவிட் 19 தடுப்பூசிகள் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த தடுப்பூசிகள் இம்மாதம் (ஒக்டோபர்) 31ஆம் திகதியுடன் காலாவதியாகும் என்று அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


காலாவதியாகவுள்ள தடுப்பூசிகள் ஒரு மில்லியனுக்கும் அதிகமாகும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Wednesday, October 19, 2022

ShortNews

டொனால்ட் லு நாட்டை வந்தடைந்தார்..!

 

அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும்