Our Feeds


Monday, July 29, 2019

www.shortnews.lk

ஹரீசுக்கு ஆதரவு - மு.கா வின் 03 அமைச்சர்கள் பதவியேற்க்க வில்லை. -

 

அமைச்சு பொறுப்பேற்கும் முஸ்லிம் ஆP களின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்த ஹரீஸ் ஆPயின் தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண முஸ்லிம் ஆPக்களான முன்னாள் அமைச்சர்கள் அலி ஸாஹிர் மற்றும் பைஸல் காசிம் ஆகியோர் அமைச்சு பொறுப்புக்களை இன்று ஏற்காமல் தவிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஹரீஸின் தீர்மானத்திற்கு ஆதரவு வெளியிடும் வகையில் இந்த தீர்மானத்திற்கு அவர்கள் வந்துள்ளதாக நம்பகமாக அறியமுடிகிறது.

ஏற்கனவே முஸ்லிம் தரப்பின் பல்வேறு பிரச்சினைகள் கிடப்பில் போடப்பட்டு தீர்வு கிடைக்காத நிலையில் ராஜினாமா விடயத்தை அதற்கு சாதகமாக பயன்படுத்தி அவற்றை பெற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டில் ஹரீஸ் இருந்து வருவதாக அவரது தரப்பு தெரிவித்துள்ளது.

கல்முனை விவகாரத்தில் இன்னும் திருப்தியடையும் வகையில் எந்த தீர்மானமும் எட்டப்படாத நிலையில் அமைச்சு பொறுப்புகளை ஏற்காமல் இருக்க வேண்டும் என அங்குள்ள முஸ்லிம்கள் ஹரீசுக்கு கோரிக்கை முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹரீசின் தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வவகையில் பைஸல் காசிம் அலி சாஹிர் ஆகியோர் அமைச்சு பதவி ஏற்பதில் இருந்து தவிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »