உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சஹ்ரானின் மனைவி
இரண்டு தொலைபேசிகளை தூக்கி எறிந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து மூன்று
கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவுலபிட்டிய பொத்தவேல பகுதியில் கிடந்த
சந்தேகத்திற்கிடமான பார்சலில் இன்று (10) முஸ்லிம்
பெண்களின் புகைப்படங்கள் அடங்கிய இரண்டு மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
வீதியின் இருபுறமும் உள்ள காட்டை வெட்டும்போது இந்த
பார்சலைக் கண்டுபிடித்தது குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் பல்லேவெல
போலீசாருக்கு தகவல் கொடுத்திருந்தனர்.
பொலிஸாரின் முதற்கட்ட ஆய்வுக்குப் பின்னர், மீரிகம
விமானப்படை தளத்தின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு மேலதிக விசாரணைக்கு
வரவழைக்கப்பட்டுள்ளது.
அங்கு கிடைத்த இரண்டு புதிய தொலைபேசிகள் சிம்கள்
இல்லாதபோதும் இயங்கும் நிலையில் இருந்ததாகவும் வருகின்றன, தொலைபேசியின்
முகப்பில் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் இருந்தன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் காவலில் இருந்த சஹாரனின் மனைவி அளித்த
வாக்குமூலத்தின் பிரகாரம் , ஜூலை 29, 30 தேதிகளில்
விசேட அதிரடிப்படை மீரிகம திவுலப்பிட்டிய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை
மேற்கொண்டது. அப்போது உடைந்த தொலைபேசியின் பல துண்டுகள் மீட்கப்பட்டன. அதனையடுத்தே இன்று இந்த இரண்டு தொலைபேசிகள்
மீட்கப்பட்டுள்ளன.
