இலங்கையில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றை இன்று
பாராளுமன்றத்தில் பட்டியலிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா
சம்பந்தன் எம். பி.
புதிய அரசியலமைப்பை வழங்குவதாக கூறி மக்கள் ஆணையை பெற்ற
இந்த அரசும் தமிழர்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாக ஆகிவிடக் கூடாதென சபை
ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்து இன்று சபையில் உரையாற்றினார்
சம்பந்தன்.
பண்டா – செல்வா
, டட்லி செல்வா ஒப்பந்தங்களை மேற்கோள் காட்டியும்
இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளின் வரலாறுகளையும் சபையில் விபரித்தார் சம்பந்தன்.
அவர் மேலும் கூறியதாவது ,
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு 10 வருடங்கள்
கடந்தும் இன்னும் தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வு இல்லை.தமிழர்கள் இரண்டாந்தர
பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர்.சர்வதேச சமூகம் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்துவிட
முடியாது.
சர்வதேச சமூகம் அரசியல் , இராஜதந்திர
, பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை வழங்க
வேண்டும்.புலிகளை தோற்கடிக்க உதவியது சர்வதேச சமூகம். இதனால் பாதிக்கப்பட்டது
தமிழ் மக்களே. தமிழருக்கு பாரதூரமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்கள் பிரிவினையை
விரும்பியிருக்கவில்லை.நாட்டை பல வழிகளில் பிரிப்பது நாட்டுக்கோ தமிழருக்கோ
நன்மையில்லை. அதுதான் சமஷ்டிக் கட்சியின் கொள்கை.ஒன்றுபட்ட இலங்கைக்குள்
அதிகாரப்பகிர்வே தமிழர்களின் விருப்பமாகும்.நாடு சக்திமிக்க ஒன்றாக மாற
வேண்டுமானால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
சமூக , கலாசார
உரிமைகளை கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு உள்ள சுயநிர்ணய உரிமையை உங்களால் மறுக்க
முடியுமா?1956 ஆம் ஆண்டில் இருந்து வட கிழக்கு
மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இந்த அரசு
பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
சிங்கள பௌத்த மயமாக்கல் வடக்கு கிழக்கில் தீவிரமாக
முன்னெடுக்கப்படுவதால் தான் தமிழர் பிரச்சினை தீர்வு தாமதமாகிறதா என்று தமிழ்
மக்களும் நாங்களும் அச்சம் கொண்டுள்ளோம். இது சூட்சுமமாக முன்னெடுக்கப்படுகிறது.
எல் எல் ஆர் சி அறிக்கையின் சிபாரிசுகளை
நிறைவேற்றுங்கள்.சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டு
மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பை வைத்துக் கொண்டு நீங்கள் ஆட்சி செய்தால்
அது தவறு. அப்படிச் செய்தால் நீங்கள் தோல்வியடைந்த அரசாக செல்லுபடியற்ற அரசாக
ஆகிவிடுவீர்கள்.எனவே உச்சபட்ச அதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டும்.
எமது மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்ற முடியாது – என்றார்
சம்பந்தன்.
தமிழன்
