Our Feeds


Friday, July 19, 2019

www.shortnews.lk

ஹிஸ்புல்லாஹ்வின் பெட்டிக்களோ கெம்பசுக்காக சவுதியில் தடை செய்யப்பட்ட இயக்கத்திடமிருந்து பணம் கிடைத்துள்ளது - பொலிஸ்

 

ஹிஸ்புல்லாஹ்வின் பெட்டிக்களோ கெம்பஸ் நிர்மாணப் பணிக்காக சவுதியில் தடை செய்யப்பட்டுள்ள ஓர் இயக்கத்திடமிருந்து 1757 கோடிக்கும் அதிக பணம் கிடைக்கப் பெற்றுள்ளமை தொடர்பில் விசாரனைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பில் கொழும்பு, பிரதான நீதிமன்றில் (18) தெரிவிக்கப்பட்டுள்ளது.

04.03.2016 முதல் 07.07.2017 வரை பெட்டிக்களோ கெம்பசுக்காக 3640 மில்லியன் பணம் வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஹிஸ்புல்லாஹ்வின் மகன் ஷிராஸ் ஆகியோரின் வங்கிக் கணக்கை ஆராய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸ் தரப்பில் நீதி மன்றில் கோரப்பட்ட போது அதற்கான உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »