Our Feeds


Monday, July 29, 2019

www.shortnews.lk

பிரபல Discovery TV தொடரான MAN vs WILD நிகழ்ச்சியில், இந்திய பிரதமர் மோடி

 

உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான MAN vs WILD நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும் பங்கேற்று சுவாரஸ்யமான பயணத்தை மேற்கொண்ட டிரைலர் வெளியாகி உள்ளது.
டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் MAN vs WILD நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மலைகள், காடுகள், நதி, கடல் என பல்வேறு இடங்களிலும் பியர் கிரில்ஸ் சாகசப் பயணம் மேற்கொள்வதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது. 
இந்நிலையில், பியர் கிரில்ஸுடன் இணைந்து பிரதமர் மோடி சாகசம் செய்யும் நிகழ்ச்சி குறித்த டிரலைர் வெளியாகி உள்ளது. வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இரவு 9 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »