Dr ஷாபிக்கு எதிராக முறைப்பாடளித்துள்ள பெண்களை HSG பரிசோதனைக்கு உட்படுத்தினால் மாத்திரமே உண்மையை கண்டறிய முடியும். ஆனால் HSG பரிசோதனைக்கு அனுமதிப்பது சம்பந்தப்பட்ட பெண்களை மேலும் நோயாளிகளாக ஆக்கும் என குருநாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் சரத் வீரபண்டார நீதி மன்றத்தில் தெரிவித்ததை அடுத்து HSG செய்வதற்கு நீதி மன்றம் தடை விதித்தது.
இதே நேரம், HSG பரிசோதனையினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வித உடலியல் பிரச்சினைகளும் ஏற்படாது என இலங்கையின் மூத்த மகப்பேற்று வைத்தியரும், மகளிர் நோய் தொடர்பான இலங்கை மகப்பேற்று வைத்தியக் கல்லூரியின் முன்னால் தலைவருமான பேராசிரியர் வில்பர்ட் எஸ்.ஈ பெரேரா குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், நான் ஆயிரத்திற்கும் அதிகமான HSG பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளேன். யாருக்கும் எவ்வித பிரச்சினைகளும் அதனால் ஏற்பட்டதில்லை. அப்படியிருக்கையில் HSG பரிசோதனையினால் உடலியல் பாதிப்புக்கள் ஏற்படும் என இது பற்றிய எவ்வித தகுதியுமற்ற, பல் வைத்தியரான நீங்கள் எப்படி நீதி மன்றுக்கு தெரிவிக்க முடியும்? என பேராசிரியர் வில்பர்ட் எஸ்.ஈ பெரேரா குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
