புனித குர்ஆனுக்கும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டல்களுக்கும் மாற்றமாக செயல்பட்டு இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றமான தனி மதமாக பார்கக்ப்படும் ஷீயாக்களின் ஒரு பிரிவான தாவுதி போரா சமூகத்தின் ஆன்மிக மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் 10 தினங்கள் கொழும்பில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 1 ஆம் திகதி பம்பலபிட்டி மெரைன் டிரைவில் அமைந்துள்ள தாவூதி போரா பெரிய பள்ளிவாசலில் இம்மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இம்மாநாட்டுக்கு போரா சமூகத்தின் தலைவர் முபத்தல் செய்னுத்தீன் தலைமை வகிக்கவுள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக போரா சமூகத்தைச் சேர்ந்த சுமார் 21 ஆயிரம் பேர் இலங்கை வரவுள்ளனர். தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வருபவர்கள் தங்கியிருப்பதற்காக கல்கிசை, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் சுமார் 100 பிரபல ஹோட்டல்களில் சுமார் 3000 அறைகள் பதிவு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பிரதேசங்களில் சொகுசு மாடி வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன என சுற்றுலா அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
vidivelli
