Our Feeds


Saturday, August 31, 2019

www.shortnews.lk

இஸ்லாமிய வங்கி முறைமைக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் அனுமதி

 


ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே கையெழுத்திட்ட புதிய சட்டத்தின் கீழ் பிலிப்பைன்ஸ் முஸ்லிம்களுக்கு பரந்த அளவிலான இஸ்லாமிய வங்கி சேவைகளை அணுக முடியும்.

நாட்டில் இஸ்லாமிய வங்கி முறையின் விரிவாக்கம் பிலிப்பைன்ஸ் மத்திய வங்கி மற்றும் அதன் நாணய வாரியத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும்.

தெற்கு பிலிப்பைன்ஸில் தன்னாட்சி பெற்ற பாங்ஸமோரோ பிராந்தியத்தில் உள்ளவர்கள் உட்பட முஸ்லிம்கள் இந்த நடவடிக்கையின் பயனடைவார்கள்.

புதிய சட்டத்தின் கீழ் பொதுவான வங்கிகளும் இஸ்லாமிய வங்கி ஏற்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படும். இந்த சட்டம் வெளிநாட்டு இஸ்லாமிய வங்கிகளை பிலிபைன்ஸுக்குள் நுழைவதற்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் பொருளாதாரத்தின் தேவைகள் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் ஆரோக்கியமான போட்டியின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இஸ்லாமிய வங்கி அமைப்பில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை நாணய வாரியம் கட்டுப்படுத்தும்.

தற்போது பிலிப்பைன்ஸின் அல்-அமானா இஸ்லாமிய முதலீட்டு வங்கி பிலிபின்ஸ் நாட்டில் இயங்கும் ஒரே இஸ்லாமிய கடன் வழங்குநராகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »