எம்மிடம் பல பௌத்த பிக்குகள் அல்குர்ஆன் சிங்கள பிரதிகள் தேவையென வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களுக்கு நாம் அதனை விநியோகித்தோம். இவ்வாறு கேட்டவர்களுள் அக்மீமன தயாரத்ன தேரரும் குறிப்பிடத்தக்கவர். எம்மிடம் யார் குர்ஆன் வேண்டுமென கேட்டாலும் தாராளமாக நாம் கொடுப்போம். என சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் குறிப்பிட்டுள்ளார்.
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 10 ஆயிரம் சிங்கள குர்ஆன் பிரதிகளை பெரும்பான்மை சமூகத்தினருக்கு விநியோகிக்கவுள்ளதாக பௌத்த பிக்குகள் சிலர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் CTJ யின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக்கிடம் நெத் FM வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
