கொழும்பில் நெலம் போகுனா அரங்கில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு இன்று மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மகிந்த ராஜபக்ஷ உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் வருகை தந்துள்ளனர்.
இங்கு உரையாற்றிய கோடாபய ராஜபக்கஷ
கல்விக்காக அதிக முதலீடுகளை இடுவதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார். அறிவு ஞானத்தை முதன்மைப்படுத்திய நூற்றாண்டாக 21 ஆம் நூற்றாண்டு காணப்படுகின்றது.
இதனால் எமது அரசாங்கத்தின் கீழ் முதல் இரண்டு ஆண்டுகளில் ஒரு பெரிய முதலீட்டைக் கல்விக்காக செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழகங்களின் வசதிகளை அதிகரிக்கவும் தொழில்நுட்பக் கல்வியை விரிவுபடுத்தவும் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை ஆசியாவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களாக மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கல்விக்காக நீண்டகால தேசியக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் எனவும்இ வேலைவாய்ப்புக்கு ஏற்ற இளைஞர்களை உருவாக்க கல்வி முறைமை உருவாக்கப்பட வேண்டும் எனவும்
“மலையக இளைஞர் யுவதிகளின் கல்வி தராதரத்தை வளர்ச்சியடைய செய்வதன் மூலம் அங்கு பெரும் மாற்றத்தை உண்டாக்க முடியும்.பெருந்தோட்ட தேயிலை வருமானத்தை பகிரக் கூடிய ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டால் தொழிலாளர் வருமான பிரச்சினை தீரும். அதேபோல் சேதனப் பயிற்செய்கையை ஊக்குவிக்க வேண்டும்.
தொழிற்சங்கங்களுடன் பேசி ஒரு நியாயமான ஒரு தீர்வை பெற வேண்டும். மலையகத்தின் நகரங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் .விசேடமாக மலையகத்தில் கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும்.” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




