இந்த வீடியோவை சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதுவரை பல ஆயிரக்கணக்கானவர்கள் வீடியோவை பார்த்துள்ளனர்.
வீடியோவை பார்க்க புகைப்படத்தை க்லிக் செய்யுங்கள்.
வீடியோவை பார்க்க புகைப்படத்தை க்லிக் செய்யுங்கள்.
சிசிடிவி கேமராக்கள் தற்போது உலகம் முழுவதும் அத்தியாவசியமாகி விட்டன. பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் ஏராளமாகக் குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் உதவியுள்ளது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம், தினமும் நடக்கும் சாலை விபத்துகளின் கோரக் காட்சிகள், தற்செயலாக நடக்கும் அற்புதங்களின் காட்சிகள் போன்றவையும் இணையத்தில் வைரலாகிறது.
இப்படி சிசிடிவியில் பதிவான மனதைப் பதைபதைக்கவைக்கும் காட்சிதான் தற்போதும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. வீடியோவின் தொடக்கத்தில் திகிலூட்டும் காட்சிகள் இருந்தாலும் இறுதிக் காட்சி சற்று மன நிம்மதியைத் தருகிறது. துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வீடியோ தொடங்கும்போது ஒரு சிறுமி லிஃப்ட்டில் (Lift) உள்ளார். அவரைத் தொடர்ந்து இரண்டு சிறுவர்கள் லிஃட்டுக்குள் வருகிறார்கள். அதில் ஒரு சிறுவன் கையில் கயிற்றை வைத்து விளையாடியவாறே உள்ளே நுழைகிறான். அடுத்த சில நிமிடங்களில் லிஃப்ட் மேலே செல்கிறது. அப்போது சிறுவனின் கையிலிருந்த கயிறு லிஃப்ட் கதவில் சிக்கி அதன் மறுமுனை சிறுவனின் கழுத்தை இறுக்கி லிஃப்டின் மேலே தூக்கி நிறுத்துகிறது.
Video:
Video:
