Our Feeds


Wednesday, August 7, 2019

www.shortnews.lk

காஷ்மீர் மக்களுக்காக எந்த எல்லைக்கும் செல்வோம். - பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா

 


காஷ்­மீ­ருக்கு சிறப்பு அந்­தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப் பிரி­வு­களை மீளப்பெற தீர்­மானம் இந்­திய நாடா­ளு­மன்ற மாநி­லங்­க­ள­வையில் (ராஜ்­ய­சபா) நேற்று முன்­தினம் நிறை­வேற்­றப்­பட்­டது. ஜம்­மு-­காஷ்மீர் மாநி­லத்தை இரு யூனியன் பிர­தே­சங்­க­ளாக பிரிக்கும் மசோ­தாவும் மாநி­லங்­க­ள­வையில் நிறை­வே­றி­யது.

இந்­நி­லையில், பாகிஸ்தான் இரா­ணு­வத்தின் தீர்­மானம் மேற்­கொள்ளும் அதி உயர் அமைப்­பான, படைத் தள­ப­தியின் மாநாடு நேற்று கூடி­யது.

இக்­கூட்­டத்தில் பாகிஸ்தான் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா பேசு­கையில், காஷ்மீர் மக்­களின் சுதந்­தி­ரப் போராட்­டத்­துக்கு பாகிஸ்தான் இரா­ணுவம் ஆத­ர­வ­ளிப்­பதை மீண்டும் உறு­திப்­ப­டுத்­தினார் எனவும், காஷ்மீர் மக்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக எந்த எல்­லைக்கும் செல்ல பாகிஸ்தான் இரா­ணுவம் தயார் என அவர் கூறினார் எனவும் பாகிஸ்தான் பாது­காப்புப் படை­களின் பொது­மக்கள் தொடர்­புகள் பிரிவு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

காஷ்மீர் தொடர்­பான இந்­தி­யாவின்; நட­வ­டிக்­கை­களை நிரா­க­ரிக்கும் பாகிஸ்தான் அர­சாங்­கத்தின் தீர்­மா­னத்­துக்கு பாகிஸ்தான் இரா­ணு­வத்தின் படைத் தள­ப­தியின் மாநாடு முழு­மை­யாக ஆத­ர­வ­ளிக்­கி­றது.

ஜம்மு காஷ்மீர் மீதான இந்­தி­யாவின் ஆக்­கி­ர­மிப்பை சட்­ட­பூர்­வ­மாக்­கு­வ­தற்கு பல தசாப்­தங்­க­ளுங்கு முன்னர், 370 ஆவது மற்றும் 35 ஏ சட்­டப்­பி­ரி­வுகள் மூலம் இந்­தியா மேற்­கொண்ட முயற்­சி­களை பாகிஸ்தான் ஒரு­போதும் அங்­கீ­க­ரிக்­க­வில்லை.

இப்­போது இந்­தி­யா­வி­னா­லேயே அச்­சட்­டப்­பி­ரி­வுகள் இரத்­துச்­செய்­யப்­பட்­டுள்­ளனஎனவும் மேற்­படி அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. காஷ்மீர் மக்­களின் சுதந்­திரப் போராட்­டத்­துக்கு பாகிஸ்தான் இரா­ணுவம் இறு­தி­வரை துணை­யாக நிற்கும்.

இது தொடர்பான எமது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைக்குச் செல்லவும் நாம் தயாராகவுள்ளோம்என ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா தெரிவித்தார் என மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »