கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிற்கு சவுதி அரசாங்கம் நிதி வழங்கியமை தொடர்பான வழக்கை சிறப்பு வழக்காக கருதி விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கோரியுள்ளார்.
கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எந்தவொரு சந்தர்பத்திலும் பெட்டிகலே கெம்பஸை திறக்க அனுமதிக்க போவது இல்லை என தெரிவித்தார்.
ஹிஸ்புல்லாவின் கணக்குகளில் ஆயிரம் கோடியே 700 பில்லியன் ரூபாவாக இருப்பதாகவும், எனவே அவர் எவ்வாறு இந்த பணத்தை பெற்றார் என்பது தொடர்பிலான கணக்கு அறிக்கையை கேட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கு ஏன் விசாரிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பிய அவர், பயங்கரவாதத்திற்கு தேவையான பணம், சவுதி அரசு வழங்கிய பணத்தால் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
2017 ஆம் ஆண்டில் பிரதமர் வெளிநாட்டு நிதியச் சட்டத்தை சிறப்பு பிரேரணையாக நிறைவேற்றியதாகவும், இந்த துரோக சட்டத்தின் மூலமே இன்று ஹிஸ்புல்லா கொண்டுவரும் எந்தவொரு நிதியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தேரர் கூறினார்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைய அவரின் கணக்கில் 36,298 ரூபா மாத்திரமே தற்போது உள்ளதாகவும், ஆனால் 444 கோடி ரூபா வெளியில் பறிமாறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே இது தொடர்பான வழக்கை சிறப்பு வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் ரத்தன தேரர் கூறினார். ஹிஸ்புல்லா பெட்டிக்கலோ கெம்பஸை திறக்க முடியும் என்றால், இது ஒரு நாடு அல்ல, ஜனவரியில் திறக்க அனுமதிக்கப்படாது.
அதில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளுக்காக ஹிஸ்புல்லாவை நிச்சயமாக சிறையில் அடைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் மேலும் கூறினார்.
