Our Feeds


Sunday, August 11, 2019

www.shortnews.lk

பீல்ட் மார்ஷல் பதவியை மீள ஒப்படைக்கிறார் சரத் பொன்சேகா ?

 

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தனது பீல் மார்சல் பதவியை திருப்பி ஒப்படைப்பதற்கு தயாராவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொசான் குணதிலக்க ஆகியோருக்கு முறையே அட்மிரால் ஒப் த பிலீட் எனவும், மார்சல் ஒப் த எயார் போஸ் ஆகிய பதவிகள் வழங்கப்பட்டமையை அடுத்தே சரத் பொன்சேகா இந்த தீர்மானம் எடுக்கப் போவதாக இன்றைய சகோதர வார இதழொன்று அறிவித்துள்ளது.
இவர்களுக்கு வழங்கப்பட்ட உயர் பதவிகள் இரண்டும், முன்னாள் இராணுவத் தளபதிக்கு வழங்கப்பட்ட பதவிக்கு சமமாக காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த பதவிகள் வழங்கப்பட்டமையையிட்டு தனக்குள் அதிருப்தி உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »