சுய நிதி ஆதாரங்கள் இல்லாமல் வெளிநாட்டு நிதியுதவிகளை நம்பியிருக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் பெட்டிக்களோ கெம்பஸ் நிறுவனத்தை பல்கலைக் கழகமாக அங்கீகரிக்க முடியாது என உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், அந்நிறுவனத்தை அரசு பொறுப்பேற்பது தொடர்பில் அமைச்சரவை உபகுழு தீர்மானமெடுக்கும் என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.
