பௌத்த பிக்குகளால் தமிழர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் பெரிய தலையிடியாகத்தான் இருக்கிறது என கூட்டமைப்பினரிடம் மனந்திறந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றது.
தொல்பொருள் திணைக்களம், வனஜீவ ராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது, காணிகள் விடுவிக்கப்படாதது, பௌத்த பிக்குகளால் கன்னியா, நீரா வியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் குறித்து கூட்டமைப்பு தரப்பு விரிவாக குறிப்பிட்டது.
இதை கேட்டுக் கொண்டிருந்த மைத்திரி, “பௌத்த பிக்குகளால் தமிழர்களிற்கு மட்டு மல்ல, எனக்கும் பெரிய தலையிடியாகத்தான் இருக்கிறது. இங்கு பிரச்சினைகளை தந்து கொண்டிருக்கிறார்கள்“ என்றார்.
