கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி தேசிய தவ்ஹீத் அமைப்பு ஐ.எஸ். அமைப்பின் கொள்கையை பரப்புவதாக தகவல் கிடைத்ததாகவும் இதுவே சஹ்ரான் தொடர்பில் தனக்கு கிடைத்த முதலாவது தகவல் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தான் பதவியில் இருந்த காலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பில் 13 புலனாய்வு தகவல்களை அரசாங்க புலனாய்வு பிரிவினர் தனக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது வேண்டுகோளிற்கு இணங்க அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் அறிக்கை ஒன்றை தன்னிடம் சமர்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
