Our Feeds


Tuesday, September 17, 2019

www.shortnews.lk

இன்று (17) சஜித் விசேட செய்தியாளர் மாநாடு – முக்கிய முடிவு அறிவிப்பு!

 


ஜனாதிபதி தேர்தல் குறித்து நாளை காலை விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்துகிறார் அமைச்சர் சஜித் பிரேமதாச. இதன்போது முக்கிய முடிவுகளை அவர் அறிவிக்கவுள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இந்த செய்தியாளர் மாநாடு நடக்கவுள்ளது.

முன்னதாக இன்று காலை பிரதமர் ரணிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிய சஜித், ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிட தயாரென்றும் அது தொடர்பில் கட்சிக்குள் இரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறும் கேட்டிருந்தார்.



அதேசமயம் நாளை அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் ரணிலை சந்தித்து சஜித்தை வேட்பாளராக நியமிக்கக் கோரும் கடிதமொன்றை கையளிக்கவுள்ளதாக அறியமுடிந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »