பத்திரிகையாளர் ஜமால் கசோகியின்
கொலைக்கு தான் முழுப் பொறுப்பேற்றபதாகவும் தனது
பார்வையின் கீழ் அது நடந்தது எனவும் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து BBC தொலைக்காட்சியின் ஆவணப்பட முன்னோட்டத்தில் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான்
தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில்
சவூதி இளவரசர் முகமது சல்மான், ஜமாலின் மரணத்துக்கான அனைத்துப்
பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் ஜமாலின் மரணம் என் பார்வையின்
கீழேதான் நடந்தது” என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியைச் சேர்ந்த பெண்ணை
ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில்,
கடந்த
ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி தூதரகத்துக்குச்
சென்றிருந்தபோது அவர் கொல்லப்பட்டார்.
