ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவு தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் உள்ள ஏனைய சிறு கட்சிகளுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக் பெறக்கூடிய வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமது கட்சி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சிறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடி எடுக்கும் தீர்மானம், ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் கூட்டப்படும் போது அறிவிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்படும் போது அது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார். எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெறக்கூடிய ஒருவர் தேர்தலுக்காக களமிறக்கப்பட வேண்டும் என பரிந்துரைப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
