செல்ஃபி போதும்
இனிமேல் ஸ்லோஃபி
இந்த வருடம் ரோமன் எண்
முறையில் இருந்து மாறியிருக்கிறது ஆப்பிள். இந்த புதிய ஐபோனுக்கு ஐபோன் 11 என
பெயரிட்டிருக்கிறது. அதே போல இந்த போனில் கேமரா அமைப்பு இதுவரை இல்லாத வகையில்
முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 12MP வைடு மற்றும் 12MP அல்ட்ரா வைடு என இரண்டு கேமராக்கள் இதில் இருக்கின்றன. முன்புற கேமராவில் ஸ்லோ
மோஷன் வீடியோக்களை எடுக்க முடியும் . இது வேறு எந்த போனிலும் இல்லாத ஒரு வசதி
என்று ஆப்பிள் இதற்கு ஸ்லோஃபி என பெயரிட்டிருக்கிறது. இந்த கேமராக்கள் மூலமாக 60fps 4K வீடியோவை எடுக்க முடியும். இந்த போனில் A13 Bionic ப்ராஸசர் இருக்கிறது. இது தற்சமயம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில்
பயன்படுத்தப்பட்டு வரும் Snapdragon 855 ப்ராஸசரை விடவும் அதிக திறன் கொண்டதாக இருக்கும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை $699
புதிய ஐபோன்களின் இந்திய விலை நிலவரம்.
64,990 ரூபாய் ஐபோன் 11 ப்ரோ: 99,900 ரூபாய் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்: 1,09,900 ரூபாய் ஆப்பிள் டிவி ப்ளஸ் சேவை: மாதம் 99 ரூபாய்
ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் விலை நிலவரம்!
சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ட்ரிபிள் கேமரா, டால்பி அட்மாஸ் என மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் வெளியாகிறது ஐபோன் 11 ப்ரோ. $999 விலையில் ஐபோன் 11 ப்ரோவும், $1099 விலையில் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸும் விற்பனைக்கு வருமாம்!
ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேதான் ஆப்பிள்
வாட்ச் 5-ன் ஸ்பெஷல்
ஆப்பிள் வாட்ச்சில்
இருக்கும் குறிப்பிடத்தக்க வசதி ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேதான். மேலும் இதன் பேட்டரி
லைப் 18 மணி நேரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 100% மறுசுழற்சி செய்ப்பட்ட
அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. GPS இருக்கும் மாடல் விலை $399 டாலர், செல்லுலர் மாடல் விலை $499 டாலர்.
குறைந்த விலையில் 7th ஜென் ஐபேட் வெளியானது!
$329 விலையில் விற்பனைக்கு வருகிறது 7th ஜென் ஐபாட். முந்தைய 6th ஜென் ஐபேட் இந்தியாவில் சுமார் 27,000 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது.
இந்த 7th ஜென் ஐபேடும் கிட்டத்தட்ட அதே விலையில்
விற்பனைக்கு வரும் என நம்பலாம்.
வெறும் $4.99-க்கு ஆப்பிள் டிவி ப்ளஸ்
ஸ்ட்ரீமிங் சேவை!
சில மாதங்களுக்கு
முன்பு அறிவிக்கப்பட்ட ஆப்பிளின் டிவி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவை நவம்பர் 1 முதல்
கிடைக்கத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 19 முதல் ஆப்பிளின் கேமிங்
சேவை!
ஆப்பிளின்
ஆன்லைன் கேமிங் சேவையான 'ஆர்கேட்' செப்டம்பர் 19 முதல் மக்களுக்கு
கிடைக்கத்தொடங்கும். நூற்றுக்கணக்கான கேம் ஸ்டூடியோக்கள் தயாரித்த கேம்கள்
மொத்தமாக மாதம் 4.99 டாலர் சந்தாவுக்கு கிடைக்கும். முதல் மாதம் ஃப்ரீ ட்ரையலாக
கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விகடன்






