Our Feeds


Wednesday, September 11, 2019

www.shortnews.lk

ஞானசாரவை விடுதலை செய்தமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு டிசம்பர் 05ல் விசாரனை

 



கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஜனாதிபதி எடுத்த தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை பரிசீலனை செய்வதற்காக டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி அழைக்குமாறு உயர்நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது.

காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி மற்றும் மாற்று கொள்கை மையத்தினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் சிசிர த ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இதன்போது, இந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »