Our Feeds


Monday, September 2, 2019

www.shortnews.lk

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசேட கலந்துரையாடல் இன்று

 



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் இன்று கலந்துரையாடலில் ஈடுபட உள்ளனர். 

தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று மாலை 3.30 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான இறுதி அறிக்கையில் தயாரிப்பது தொடர்பில் தெரிவுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக் கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தற்போது குறித்த அறிக்கை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரப்பிக்கப்பட்டுள்ளதாக ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். 

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கிய வேண்டுகோளிற்கு இதுவரையில் பதில் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »