Our Feeds


Monday, September 16, 2019

www.shortnews.lk

காத்தான்குடி மாணவி கணிதப் போட்டியில் சாதனை - போட்டிக்காக வியட்நாம் செல்கிறார்.

 



கல்வியமைச்சினால் நடாத்தப்பட்ட இவ்வாண்டுக்கான தேசிய விஞ்ஞான ஒலியம்பியட் போட்டியில் பங்கு பற்றிய காத்தான்குடி 3ம் குறிச்சி ஊர் வீதியைச் சேர்ந்த முகம்மட் சபீக் ஸீனா நப்ரின் என்ற மாணவி 6வது இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளதுடன் சர்வதேச போட்டிக்காக வியட்நாம் செல்லவும் தகுதி பெற்றுள்ளார். 

காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் 6ம் வகுப்பில் கல்வி கற்கும் இம்மாணவி பாடசாலையினூடாக கல்வியமைச்சினால் நடாத்தப்பட்ட இவ்வாண்டுக்கான தேசிய விஞ்ஞான ஒலியம்பியட் போட்டியில் பங்கு பற்றி இந்த சாதணையைப் பெற்றுள்ளார். 

இந்தப் போட்டிக்காக 108 மாணவர்கள் தோற்றியதில் இம் மாணவி 6வது இடத்தினைப் பெற்றுள்ளதுடன் கிழக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மாணவர்களுக்குள் இம் மாணவி மாத்திரமே சர்வதேசப் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  எதிர்வரும் 26.11.2019 அன்று இம்மாணவி வியட்நாம் செல்லவுள்ளார். 

எம்.எஸ்.எம்.நூர்தீன் காத்தான்குடி 16.09.2019

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »