Our Feeds


Wednesday, October 30, 2019

www.shortnews.lk

பௌத்த தர்மத்திற்கு முன்னுரிமை வழங்கி உயரிய இடம் வழங்கப்படும் - சஜித் பிரேமதாச

 



ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் நாட்டில் வறுமையை ஒழிக்க தெளிவான திட்டம் ஒன்றை அமுல்படுத்த எதிர்ப்பார்ப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மஹரகம பகுதியில் நேற்று மாலை (29) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் நாட்டில் உள்ள இளைஞர், யுவதிகளின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல் பௌத்த தர்மத்திற்கு முதலிடம் வழங்கி அரசியல் அமைப்பில் குறிப்பிடபட்டுள்ளவாறு பௌத்ததிற்கு உயரிய இடத்தை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களுக்கு கிடைக்க வேண்டிய சகல ஜனநாயக உரிமைகளை பெற்றுக் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேரணிகளை நடத்துதல், ஆர்பாட்டங்களை நடத்துதல், கோஸங்களை வெளிப்படுத்தல் போன்றவை மக்களின் உரிமை என தெரிவித்துள்ள அவர் அதற்கு ஏற்றவகையில் நாட்டில் ஜனநாயக முறைமை கடைப்பிடிக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »