எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இன்று காலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர்
அமைச்சர் ஹக்கீமின் இல்லத்தில் வேட்பாளர் சஜித்துடன் நடந்த கூட்டத்தில் இந்த
இறுதித் தீர்மானம் எட்டப்பட்டது.
முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினை , கல்முனை
பிரதேச செயலக விவகாரம் உட்பட்ட பல விடயங்களை சஜித்தின் கவனத்திற்கு கொண்டுவந்த மு
கா பிரதிநிதிகள் அவை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கப்படவேண்டுமென
வலியுறுத்தியதாக அறியமுடிந்தது.
