Our Feeds


Friday, October 18, 2019

www.shortnews.lk

இசுறு தேவப்பிரிய சு.கா வின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடி நீக்கம்.

 



மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் மற்றும் மஹரமக தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் தலைமையில் மஹரமகவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் இசுரு தேவப்பிரிய கலந்து கொண்டதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தான் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்த பின்னரே குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »