Our Feeds


Thursday, November 14, 2019

www.shortnews.lk

மஹிந்த தேசப்பிரியவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர் யாழில் கைது!

 


தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவ பதவி விலக வேண்டும் என கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா பொலிஸாரல் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
கொழும்பு மாவட்ட வாக்காளர்களின் விபரத்தை கோரிய போது அது சிங்கள மொழியில் தரப்பட்டதாகவும், அது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்ட போது , தமிழில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியபோதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதமையால், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன்படி இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மாவட்ட செயலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
அதனை அடுத்து தேர்தல் கடமைக்காக மாவட்ட செயலகத்தில் கடமையில் இருந்த பொலிஸார் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.
அதற்கு அவர் உடன்படாததையடுத்து, பொலிஸார் அவரை பலவந்தமாக கைது சென்று தூக்கிச் சென்றனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »