Our Feeds


Monday, November 25, 2019

www.shortnews.lk

தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத தலைவர்களுடன் இணைவதை விட சும்மா இருந்துவிட்டு போகலாம் - பிரசன்ன ரணதுங்க

 



கடந்த அரசாங்கத்தில் பிரிவினைவாத கொள்கைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட பிரேரணைகளை நடைமுறைபடுத்துவதை தடுப்பதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு பலத்தினை வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சீதுவ பகுதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் இடைக்கால அரசாங்கம் என்பதால் எமக்கு பெரும்பான்னை இல்லை. அவ்வாறு பெரும்பான்மை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத தலைவர்களுடன் இணைய வேண்டும்.

அதனை விட சும்மா இருந்துவிட்டு போகலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »