Our Feeds


Saturday, November 16, 2019

www.shortnews.lk

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பெண்கள் ஆர்வத்துடன் வாக்குப் பதிவு

 

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மற்றும் தமிழர் பிரதேசங்களில் மிகவும் அமைதியாக நடைபெற்று வருகிறது.
மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை பல இடங்களில் அவதானிக்க முடிகிறது. கிழக்கு மாகாணம் - அம்பாறை மாவட்டத்தில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்த போதும், மக்கள் தொடர்ந்து வாக்களித்த வண்ணம் இருந்தனர்.
காலை 10.00 மணிக்கு முன்னதாகவே பல இடங்களில் கணிசமான அளவு மக்கள் வாக்களித்திருந்தனர். குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »