ஊழல், மோசடி, வீண்விரயம் அற்ற ஆட்சி ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே நாட்டில் தேசிய ஒற்றுமையை நிலைநாட்ட முடியும் எனவும் அவர் கூறினார்.
மஹரகம பகுதியில் நேற்று (13) இரவு இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
