இந்த வெற்றியில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களும் பங்குதாரர்களாக வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் நினைத்தது போன்று எமக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை.
எனினும் நாட்டின் ஜனாதிபதியாக முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும்.
மேலும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த விடயங்கள் உட்பட தேர்தல் வாக்குறுதிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றுவேன்.
நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நான் பாதுகாப்பேன். பயங்கரவாதம், தீவிரவாதத்துக்கு எனது ஆட்சியில் இடமில்லை.
பாதுகாப்பு அமைச்சராக நானே செயற்படுவேன். நிறைவேற்று அதிகாரத்தை சரியாக பயன்படுத்துவேன்.
எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு ஊழல் மோசடி குற்றச் செயல்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், போதைப்பொருள் கடத்தல்கள், பாதாள குழுக்களின் செயற்பாடுகள் எதுவும் இடம்பெற இடமளிக்கமாட்டேன்.
நான் எனது நாட்டை அன்பு செய்கின்றேன். அதனால் எனது ஆட்சியின் எந்தவொரு ஊழல் மோசடிகளும் இடம்பெறாது.
