முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கட்சித் தாவல் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஐ.தே.க மூலம் ஒரு முஸ்லிம் கட்சித் தலைவரின் ஆதரவுடன் பாராளுமன்றம் நுழைந்த ஒருவர் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
இந்த நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தபாயவுடன் இணைந்து கொள்ளும் ரகசிய பேச்சுவார்தைகளை முன்னெடுத்து முயற்சித்து வரும் நிலையில் குறித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கோத்தபாய தரப்பு முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கே நேரடியாக சென்று தன்னை இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியும் தற்போதைய நிலையில் அதற்கான வாய்ப்புகள் இல்லையென கதவை சாத்தி விட்டுள்ளது பொது ஜன பெரமுன தரப்பு.
