அன்புள்ள மனோகனேசன்!
நேற்று நடந்த சக்தி டீவி நிகழ்ச்சியில் கௌரவ அத்தாவுள்ளா மீது தண்ணீர் வீசினீர்கள்! இந்த சம்பவம் சில துரோகத்தால் வஞ்சனை செய்யப்பட்ட முஸ்லீம் காடையர்களால் வரவேற்கப்படுகிறது. ஆனாலும் ஒரு பொறுப்பற்ற அரசியல்வாதியான உங்களிடம் இந்த குணத்தை நான் எதிர்பார்த்ததுதான்.
2000ம் ஆண்டு கொழும்பில் காணாமல் போனவர்கள் தொடர்பான அமைப்பை உருவாக்கிய முதல் உங்களை நன்கு அறிந்தவன். தலைநகரில் தமிழ் மக்கள் வெள்ளை வேன் கடத்தலுக்கு எதிராக போராடி அமெரிக்க விருதும் உங்களுக்கு கிடைத்தது.
நீங்கள் கொழும்பு மாநகரசபை ,மேல்மாகாணம் சபை என்று அரசியல் தொடங்கினார்கள்.வட கிழக்கு தமிழ் கட்சிகள் கொழும்பு தமிழர்களை புறக்கணிக்கிறது என்ற இனவாத, பிரதேசவாத கொள்கையுடன் உங்கள் பயணம் ஆரம்பமானது .
கட்சிக்குள் உங்கள் சகோதரனை உள்வாங்கியதால் பலர் கட்சியைவிட்டு வெளியேறினர். உங்களுக்கு 2010 ல் ரணில் தேசியப் பட்டியல் தரவில்லை என்பதற்காக ரணிலுக்கு எதிராக நாடு பூராவும் கேவலமாக பேசினீர்கள்.
உங்கள் சகோதரர் பிரபா கணேசன் மஹிந்தவுடன் கட்சி மாறி பிரதி அமைச்சரானார். நீங்கள் பதவியும் ,கட்சியிம் இல்லாமல் நடுரோட்டில். நின்றது நினைவுள்ளதா?
இறுதியில் 2015ல் ரணிலுடன் மாற்று வழியில்லாமல் சரணடைந்தீர்கள்.ஐதேகட்சிக்குரிய தமிழ் வாக்குகளை கொழும்பில் உங்களுக்கு வழங்கி வெற்றி பெறவைத்தனர்.இதற்காக முன்னால் அமைச்சர் சுவாமிநாதனை போட்டியிடாமல் செய்து ரணில் உங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கினார்.
அமைச்சராக நீங்கள் கொழும்பில் தமிழ் மக்களுக்கு சார்பான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .கொழும்பு தமிழ் மக்களிடம் பிரதேசவாதத்தை உருவாக்கிய நீங்கள்,பதவி கிடைத்ததும் தமிழ்முற்போக்கு கூட்டமைப்பை உருவாக்கி மலைநாட்டு மக்களுக்கு பிரதிநிதியானீர்கள்.இதன் பலனாக கடந்த உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பில் உங்கள் கட்சி பாரிய தோல்வியை கண்டது ஞாபகம் உள்ளதா?
அரசகரும மொழி மற்றும் நல்லிணக்கம் உங்களுக்கு வழங்கிய அமைச்சு.2015 ம் ஆண்டு முதல் இந்த அமைச்சின் நிதியில் 15% மட்டுமே வடகிழக்குக்கு ஒதுக்கினீர்கள்.இதில் முஸ்லீம பிரதேசங்களுக்கு 1% கூட வழங்கப்படவில்லை .உங்கள் அமைச்சால் நடாத்தப்பட்ட 10 கு அதிகமான நடமாடும் சேவைகள் முஸ்லீம்கள் அல்லது கிழக்கு தமிழ்மக்களது பிரதேசத்தில் நடாத்தப்படவில்லை .உங்கள் அமைச்சு மலைநாட்டுக்கு மட்டுமான அமைச்சு அல்ல்்என்பதல்ல ??
சஜித் பிரமதாசவின் தோல்விக்கு காரணம் முஸ்லீம் தலைவர்கள் குறிப்பாக ரிசாட் என்று பழிபோட்டீர்கள். நீங்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் கொழும்பு வட,கிழக்கு மற்றும் மத்திய பிரதேசத்தில் தோல்வி கண்டது வெட்கம் இல்லையா ?றிசாத் வடகிழக்கில் சஜித்துக்கு வரலாறு காணாத வாக்குகளை பெற்றுக் கொடுத்தார்.
அவிசாவளை பாடசாலையில் முஸ்லீம் ஆசிரியைகளின் அபாயா விடயத்தில் மூக்கை நுழைத்து முஸ்லீம் சமுகத்துக்கெதிராக விபரம் சொன்ன அதிக பிரசங்கி .உங்களுக்கு பதில் தரவேண்டிய சந்தர்ப்பம் இந்த சமூகத்திற்கு வந்துள்ளது .
கல்முனை தமிழ்பிரதேச செயலக விடயத்தில் கல்முனைக்கு விஐயம் செய்து என்ன பேசினீர்கள்.ஹரீஸ் தடையாக இருந்தாலும் அடுத்த தேர்தலுக்கு முன்னர் செயலாளரை நியமித்து செயலகத்தை உருவாக்குவேன்.நாங்கள் கிழக்கில் உங்களைப் போன்ற இனவாதிகளால் பாதிக்காமல் இருக்கிப்படியான குரல் வேண்டும்.
திருகோணமலை சண்முகா பாடசாளை முஸ்லீம ஆசியைகளின் ஹபாயா பிரச்சனை இன்றும் முடியவில்லை.இதில் மூக்கை நுழைந்து பாடசாளை நிர்வாகத்தினர் செயற்பாட்டை ஆதரித்தது மறந்து விட்டதா??
ஈஸ்டர் தாக்குதலின் பின் முஸ்லீம்களை எள்ளி நகையாடினீர்கள்.பள்ளிவாசல்கள் மற்றும் அறபு மார்க்க கல்லூரிகளை தடை செய்ய வேண்டும் என பகிரங்கமாக பேசினீர்கள்.
முஸ்லீம்கள் வந்தேறு குடிகள்,தமிழ் மக்கள் வரலாற்று இனம் என்று பல இடங்களில் பேசினீர்கள்.
அரபு மொழியை நீக்க சொல்லி அந்த அமைச்சுக்கு பொறுப்பாக இருந்து நடை முறைப்படுத்தினீர்கள். அறபு மொழிசார்பான சகல செயற்பாடுகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறுத்தி ,இலங்கையில் முஸ்லீம் அடிப்படைவாதம் உருவாகி உள்ளதாக கற்பனை குதிரையை ஒடவிட்டீர்கள்.
இவ்வாறு முஸ்லீம் சமுகத்தின் அனைத்து விடயங்களின் மூக்கை நுழைத்து படு பாதள குழியில் தள்ளீனீர்கள்.உங்களுக்கு சரியான பதிலை /பாடத்தை கற்பிக்க உங்கள் ஆட்சியில் முஸ்லீம் தலமைகள் இருக்கவில்லை. இந்தியா மற்றும் சர்வதேச கைகூலியான உங்கள் முகத் திரையை கிழித்த போது குணம் வெளி பிறவிக்குணம் வந்திருக்கிறது.
கிழக்கு முஸ்லீம்களுக்கான குரலாக கௌரவ அத்தாவுள்ளா உள்ளார். கிழக்கை பிரித்து முஸ்லீம்களின் இருப்பை உறுதிப்படுத்திய தலைவன்.
கடந்த தேர்தலில் வெளிநாட்டு சதிகள் மூலம் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் .இருந்தும் 2015 முதல் எந்தப் பதவிகளையும் எடுக்காமல் மக்களுடன் இருக்கின்றார்.
கிழக்கு முஸ்லீம் சமூகத்திற்காக போராடும் அத்தாவுள்ளாவினால் உங்களின் நெருக்கடிகளை சகிக்கவோ ,கைகட்டி சிரிக்கவோ முடியாது. நீங்கள். கடந்த 5 வருடங்களாக விதைத்த முஸ்லீம்களுக்கு எதிரான விதையை இன்று அத்தாவுள்ளா 2 மணிநேர நிகழ்ச்சி மூலம் தோல் உரித்துள்ளார்.
ஆகவே உங்கள் பழைய கடையை திறக்கலாம். கொழும்பில் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யலாம். உங்கள் இனவாதப் போக்கை கொழும்பிற்குள் வைத்துக்கொண்டு வாய்மூடுவதே சிறந்தது .
இந்த சமூகத்தை மீள கட்டியெழுப்பும் பயணத்தில் நாங்கள் விழித்துக் கொண்டுள்ளோம். ஆகவே அடுத்த 5 வருடத்திற்கான ஆட்சியில் கௌரவ அத்தாவுள்ளாவின் செயற்பாடுகளை இந்த சமூகம் எதிர்பார்த்து நிற்கிறது.
ஆகவே பல்பிடுங்கிய நிலையில் உங்கள் ஆதங்கத்தை அத்தாவுள்ளாவிடம் காட்ட வேண்டாம்.அவர் இந்த சமூகத்தினால் தற்போதைய எதிர்பார்க்கப்படும் குரல்.
சஜித்துடன் சேர்ந்து சகல முஸ்லீம் தலமைகளும் நீங்களும் இனவாதம் பேசி சிங்கள மக்களை உசிப்பேத்துனீர்கள்.அதன் விளைவு சஜித் துரதிஷ்டவசமாக தோல்வி கண்டார்.ஆனால் கிழக்கில் எமது சமூகத்திற்கு தற்போதைய அரசில் இருக்கின்ற குரல் கௌரவ அத்தாவுள்ளா.
இந்தப் பதிவு மூலம் கௌரவ அத்தாவுள்ளாவை ஆதரிப்பதல்ல.உங்களைப் போன்ற இனவாத சக்திகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நபரை கௌரவிக்கும் தார்மீக பொறுப்பு உள்ளவனின் பதிலடி.
ஆகவே உங்களது செயலை வன்மையாக கண்டிப்பதோடு,அதற்கான பதிலை விரைவில் இந்த சமூகம் வழங்கும்
FAHMY MBM-UK
LLB(Hons),LLM,MPhil
Solicitor @ Asian Political Researcher
Mob:07870763570
